குடியிருப்புக்கு நடுவே இப்படியா? குடியிருக்க முடியவில்லை...
கோவை மாநகராட்சி 54வது வார்டில் பங்காரு லேஅவுட் உள்ளது. அதன் அருகில் மயானத்துக்கான இடம் உள்ளது. ஆனால் இப்போது அங்கு சடலங்கள் தகனம் செய்யப்படுவதில்லை. அதற்கு பதிலாக கட்டட கழிவுகள். மற்றும் குப்பைகள் கொட்டும் இடமாக மாறி வருகிறது. இதனால் அதன் அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழைக்காலங்களில் இரவில் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு அசுத்தமாக காணப்படுகிறது. பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பங்காரு லே அவுட்டின் அவலங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
நவ 18, 2024