பஸ்சுக்குள் இவ்வளவு மருத்துவ வசதிகளா? கிராமங்களில் ஹைடெக் சிகிச்சை அளிக்கும் சத்யசாய் சேவா நிறுவ
ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனங்கள் சார்பில், ஸ்ரீ சத்யசாய் நடமாடும் மருத்துவமனை சேவை கோவை மக்களுக்காக துவக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ சத்ய சாய் சேவா சென்ட்ரல் டிரஸ்ட் பிரசாந்தி நிலைய நிர்வாக அறங்காவலர் ரத்னாகர் கொடியசைத்து நடமாடும் மருத்துவ சேவையை துவக்கி வைத்தார். இந்த நடமாடும் மருத்துவ வாகனத்தில் மகளிர் மற்றும் குழந்தை டாக்டர்,பொது மற்றும் கண் டாக்டர் இருப்பார்கள். மருந்தகம், மருத்துவ பரிசோதனை ஆய்வகம், இ.சி.ஜி., எக்ஸ்ரே வசதிகள் உள்ளன. நவீனமயமாக்கப்பட்டு கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ளன. நடமாடும் மருத்துவ வாகனத்தின் வாயிலாக மருத்துவ சேவை ஏழை மக்களின் வீடுதேடி செல்லும். தற்போது நடமாடும் மருத்துவ வாகனம் வாயிலாக மேலும் பல மருத்துவ முகாம்களை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடமாடும் மருத்துவ வாகனம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.