/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ காலை, மாலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா | Coimbatore | Muthumariamman Temple Festival
காலை, மாலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா | Coimbatore | Muthumariamman Temple Festival
கோவை வேலாண்டிபாளையம் ஆனந்தா ஹவுசிங் காலனி ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் 28 ம் ஆண்டு திருவிழா கடந்த வாரம் கணபதி ஹோமம், கம்பம் நடுதலுடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை சிறப்பு அபிஷேகம் மற்றும் அம்மன் வீதிஉலா நடைபெற்றது. மாவிளக்கு பூஜை, பொங்கல் பூஜையுடன் தீபாராதனை காட்டப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வாக திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அம்மன் மணக்கோலத்தில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. திருக்கல்யாண ஏற்பாடுகளை தர்மகர்த்தா டாக்டர் சிவராமன் குடும்பத்தினர் செய்தனர்.
மே 24, 2024