ஏக்கருக்கு ₹60,000 செலவு செய்து பயனில்லை | Mysterious disease affecting Sugarcane crops | Udumalpet
ஏக்கருக்கு ₹60,000 செலவு செய்து பயனில்லை | Mysterious disease affecting Sugarcane crops | Udumalpet திருப்பூர் மாவட்டம் உடுமலை ஏழு குள பாசனத்துக்கு உட்பட்ட போடிபட்டி, சுண்டக்காம்பாளையம், பள்ளப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு சாகுபடி நடக்கிறது. நோய் தாக்குதல், பருவமழை பொய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இப்பகுதி விவசாயிகள் தென்னை மற்றும் இதர சாகுபடிக்கு மாறி விட்டனர். அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உற்பத்தி முடங்கியுள்ளது. எனவே தற்போது வெல்லம் தயாரிப்புக்கு மட்டும் பரவலாக கரும்பு சாகுபடி நடக்கிறது. கரும்புப் பயிரில் பல்வேறு நோய்த்தாக்குதல் ஏற்பட்டு மகசூல் பாதித்து வருகிறது. ஏக்கருக்கு 50 முதல் 60 ஆயிரம் ரூபாய் செலவு செய்தும் விளைச்சல் இல்லை. உடுமலை சுண்டக்காம்பாளையம் பகுதியில், கரும்பு கரணைகள் நடவு செய்து பயிர்கள் வளர்ச்சித்தருணத்தில் உள்ளன. ஆனால் பயிர்களின் சோகை நுனி பச்சையம் இழந்து குறுகிய நாட்களில் கருகி வருகிறது. சில பயிர்களில் தென்பட்ட இந்த நோய்த்தாக்குதல் தற்போது வேகமாக பரவி வருகிறது. வைரஸ் அல்லது புழு தாக்குதலால் இப்பிரச்னை ஏற்படுகிறதா என தெரியாமல், விவசாயிகள் தவிக்கின்றனர். கரும்புப் பயிரைத் தாக்கும் மர்ம நோயாள் கரும்பு சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. மகசூல் வெகுவாகப் பாதித்துள்ளது. ஓராண்டுக்கு பராமரித்து, ஏக்கருக்கு 60 ஆயிரம் ரூபாய் செலவு செய்து மகசூல் குறையும் போது, கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கிறது. எனவே கரும்புப் பயிரை தாக்கும் நோ