தேசிய சிலம்பம் போட்டியில் தமிழகத்திற்கு பெருமை | National Silambam Competition
தேசிய சிலம்பம் போட்டியில் தமிழகத்திற்கு பெருமை / National Silambam Competition / Proud of Tamil Nadu நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பொன்னூர் பகுதியை சேர்ந்தவர்கள் யோகேஷ் மற்றும் சுப்புலட்சுமி. இருவரும் சிலம்பம் பயிற்சியாளர்கள். இவர்கள் பொன்னூர், நாடுகாணி, தேவாலா உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமப்புற மாணவர்கள் 30 பேருக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக சிலம்பம் பயிற்சி அளித்து வருகின்றனர். தேசிய சிலம்பாட்ட கமிட்டி சார்பில் கோவையில் சமீபத்தில் நடைபெற்ற தேசிய சிலம்பம் போட்டியில் 19 பேர் பங்கேற்றனர். அதில் 8-பேர் தங்கம் வென்றனர். மூன்று பேர் வெள்ளி மற்றும் 8 பேர் வெண்கலம் வென்று சாதனை படைத்தனர். இரண்டாம் வகுப்பு படிக்கும் சுபிட்சா ஸ்ரீ என்ற மாணவியும் சிலம்பம் போட்டியில் பங்கேற்று வெள்ளி பதக்கம் பெற்று அசத்தினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பொன்னூர் பகுதியில் பாராட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியன், கூடலூர் அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் மகேஸ்வரன், பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் ரகு பங்கேற்று மாணவர்களை வாழ்த்தினார்கள். கிராமப்புற மாணவர்கள் தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் பதக்கங்களை குவித்து சொந்த ஊருக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தனர்.