கோவைக்கு தேவை மெமு ரயில் | MEMU Train
மெமு ரயில்கள் என்பது குறைந்த துாரத்தில் உள்ள இடங்களுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள். இதில் இரண்டு பக்கமும் இன்ஜின் இருக்கும். ஒரு பெட்டியில் 150 பேர் வீதம், 8 பெட்டிகளில் ஆயிரத்து 200 பேர் எளிதாக பயணம் செய்யலாம். பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பாலக்காடு ஆகிய இடங்களுக்கு கோவையில் இருந்து இயக்கப்படும் 13 ரயில்கள் மெமு ரயில்களாக உள்ளன. இது தவிர ஈரோடுக்கும், பழனிக்கும் மெமு ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதன் வாயிலாக பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து ரயில்வேக்கு வருமானமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கோவை மக்களுக்கு அவசிய தேவையான மெமு ரயில் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 05, 2024