கோவையில் ரெடிமேட் பஸ் ஸ்டாப்... மொபைலுக்கு சார்ஜ் போட்டுக்கலாம்
நகரங்களில் பஸ் பயணிகளுக்காக ஆங்காங்கே பஸ் ஸ்டாப்கள் அமைக்கப்படும். அதில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றாலோ அல்லது வேறு இடத்தில் பஸ் ஸ்டாப் அமைக்க வேண்டும் என்றாலோ அதை இடித்து விட்டுத் தான் புதிதாக கட்ட வேண்டும். இதை தவிர்க்க கோவை மாநகராட்சி சார்பில் காந்திபுரம் பஸ் நிலையம் அருகே பரீட்சார்த்த முறையில் ரெடிமேடாக அதாவது பிரிகாஸ்ட் முறையில் தயார் செய்யப்பட்ட பஸ் ஸ்டாப் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பயணிகள் உட்காருவதற்கான இருக்கைகள், செல்போன் சார்ஜர் டேபிள், வழித்தட எண்ணுடன் பேருந்துகள் வரும் நேரத்தை காட்டும் டிஜிட்டர் போர்டு, சி.சி.டி.வி., கேமரா உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அந்த பஸ் ஸ்டாப்பில் குறிப்பாக பெண்கள் பாதுகாப்புக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.