/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கோவையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி | anti corruption cell seize unaccounted money | covai
கோவையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி | anti corruption cell seize unaccounted money | covai
கோவை வெள்ளலூரில் உள்ள சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நான்சி நித்யா கரோலின் சார்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இங்கு லஞ்சம் கோரத்தாண்டவம் ஆடுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றது. அதைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிமளா தலைமையிலான போலீசார் நேற்று மாலை 5:30 மணியளவில் அலுவலகத்தில் திடீரென புகுந்து அதிரடி ரெய்டில் ஈடுபட்டனர். ஊழியர் கீர்த்தி என்பவரிடம் கணக்கில் வராத 1,50,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சப் ரிஜிஸ்டரர் மற்றும் ஊழியர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது.
செப் 20, 2024