/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ராமலிங்கம் செட்டியார் நினைவு கிரிக்கெட் போட்டி | cricket tournament | covai
ராமலிங்கம் செட்டியார் நினைவு கிரிக்கெட் போட்டி | cricket tournament | covai
கோவை சாய்பாபா காலனியில் உள்ள ராமலிங்கம் செட்டியார் அரசு உதவி பெறும் பள்ளி சார்பில் மாவட்ட அளவிலான ராமலிங்கம் செட்டியார் நினைவு கிரிக்கெட் போட்டி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியை பள்ளி செயலாளர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலாளர் சுரேஷ்குமார் பங்கேற்றார். முதல் போட்டியில் ராமலிங்கம் செட்டியார் பள்ளி அணி - மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி அணி மோதியது. முதலில் பேட் செய்த ராமலிங்கம் செட்டியார் பள்ளி அணி 10 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்தது.
ஜன 27, 2025