தினமலர் செய்தி எதிரொலி | உருவாகும் புதிய ரயில்வே மேம்பாலம்
கோவையை அடுத்த என்.ஜி.ஜி.ஓ., காலனியில் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இது தொடர்பாக தினமலர் சார்பில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு செய்தி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்த கேட் மூடப்பட்டு அங்கு ரயில்வே மேம்பாலம் கட்டப்பட உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. இதுகுறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
டிச 25, 2024