உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பூச்சிகளை உண்ணும் தாவரங்கள் அழிவை நோக்கி செல்லும் அபாயம் | Nilgiris

பூச்சிகளை உண்ணும் தாவரங்கள் அழிவை நோக்கி செல்லும் அபாயம் | Nilgiris

நீலகிரி மாவட்டம் கூடலுார் வனப்பகுதி பல அரிய வகை தாவரங்களின் வாழ்விடமாக உள்ளது. இங்குள்ள புல்வெளிகளில் பூச்சிகளை உண்டு வாழும், டொசிரேசி தாவர குடும்பத்தை சேர்ந்த, பெல்டேட்டா, இண்டிகா, பர்மானி தாவரங்கள் காணப்படுகின்றன. இதன் இலை ஓரங்களில் பசை போன்ற டொசின் என்ற திரவம் உள்ளது. இதன் மீது சிறிய பூச்சிகள் ஒட்டி கொள்ளும் போது அதிலிருந்து நைட்ரஜன் உறிஞ்சி உயிர் வாழ்கிறது. இத்தாவரங்கள், குறிப்பிட்ட சில புல்வெளிகளில் மட்டுமே தற்போது காணப்படுகிறது. இது குறித்து தாவர ஆய்வாளர்கள் கூறுகையில் இந்த செடிகள் குறிப்பிட்ட சில புல்வெளிகளில் மட்டுமே, அரிதாக கண்டறியப்பட்டுள்ளது. வனத்தீ, பல்வேறு காரணங்களுக்காக புல்வெளிகளை அழித்தல், அதிகளவில் பரவி வரும் உண்ணி செடிகள் உட்பட களைசெடிகள் பரவுதல் போன்ற காரணங்களால் இவைகள் அழிந்து வருகிறது. புல்வெளிகளை பாதுகாப்பதன் மூலம் இந்த செடிகளை பாதுகாக்க முடியும் என்கின்றனர். பூச்சிகளை உண்ணும் அரிய வகை தாவரங்கள் பற்றி இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

செப் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை