உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / எங்கள் கண்ணீர் தான் குளமாச்சு | தண்ணீர் இல்லாத குளங்கள்... சோகத்தில் கிராமம் .

எங்கள் கண்ணீர் தான் குளமாச்சு | தண்ணீர் இல்லாத குளங்கள்... சோகத்தில் கிராமம் .

கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில், 1045 குளம், குட்டைகளில், நீர் நிரப்பும் அத்திக்கடவு அவிநாசி திட்டம் 1916 கோடி ரூபாயில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2023 மார்ச்சில் சோதனை ஓட்டம் துவங்கியது. எனினும் பல குளம், குட்டைகளுக்கு குழாய் கூட இணைக்கப்படவில்லை. கோவை மாவட்டத்தின் எல்லையை ஒட்டி திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பொங்கலூர் ஊராட்சி உள்ளது. இங்கு திம்மநாயக்கன்புதுாருக்கு வடக்கு பகுதியில் உள்ள 10 ஏக்கர் பரப்பளவு உள்ள தாண்டான் குட்டைக்கு குழாய்கள் கூட இணைக்கப்படவில்லை. இத்துடன் மொண்டிபாளையம் செல்லும் வழியில் உள்ள குட்டையிலும் இதுவரை ஒரு சொட்டு நீர் கூட விடவில்லை. அல்லப்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த 10 ஏக்கர் பரப்பளவு உள்ள பெரிய குட்டை மற்றும் இடுகாட்டு குளம், திம்மநாயக்கன்புதுாரில் உள்ள எட்டு ஏக்கர் குட்டை, என பல குளம், குட்டைகளுக்கு தண்ணீர் விடவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

பிப் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை