உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கொள்ளையர் ஐவர் கைது | Old women killed | robbed of gold, money | 5 accused were arrested | palladam

கொள்ளையர் ஐவர் கைது | Old women killed | robbed of gold, money | 5 accused were arrested | palladam

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த காரணம் பேட்டையை சேர்ந்தவர் சுப்பையன். இவர் இறந்து விட்டார். இவரது மனைவி கண்ணம்மாள் வயது 70. வீட்டில் தனியாக இருந்த இவர் கடந்த 22 ம் தேதி அன்று முகம் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். போலீஸ் விசாரணையில் நகை, பணத்துக்காக கண்ணம்மாள் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இவ்வழக்கு தொடர்பாக 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த பல்லடம் போலீசார் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் இசக்கிமுத்து, கருத்தப்பாண்டி, கொடி முத்து மகன் இசக்கிமுத்து ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த பாஸ்கர் மற்றும் மகேஸ்வரன் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 15 சவரன் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. காரணம்பேட்டையில் உள்ள புரோட்டா கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த கொள்ளையன் பாஸ்கர், மூதாட்டி கொலை வழக்கில் மூளையாக செயல்பட்டார். இவரது யோசனைப்படி ஐந்து பேரும் சேர்ந்து மூதாட்டியை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்தது விசாரணையில் உறுதியானது. இவர்களில் மூன்று பேர் முன்னாள் குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அக் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ