உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழ் பேசும் சீனாக்காரர் ஊட்டியில் ரெஸ்டாரென்ட் நடத்தி அசத்தல்

தமிழ் பேசும் சீனாக்காரர் ஊட்டியில் ரெஸ்டாரென்ட் நடத்தி அசத்தல்

மலைகளின் அரசி ஊட்டிக்கு இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அவர்கள் பல்வேறு மொழிகள் பேசுகிறார்கள். அந்த மொழியை தெரிந்து கொண்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கு சில கைடுகள் ஊட்டியில் உள்ளனர். அப்படி வரும் சுற்றுலா பயணிகளை சீனாக்காரர் ஒருவர் கொஞ்சும் தமிழில் பேசி அசத்தி வருகிறார். ஊட்டியில் சிங்கோஸ் என்ற சைனீஸ் ரெஸ்டாரென்ட் உரிமையாளர் லியோ பவ் சுன்.இந்த ரெஸ்டாரென்ட்டில் சிக்கன் சூப் பிரபலம். கொஞ்சும் தமிழில் பேசி சுற்றுலா பயணிகளை லியோ பவ் சுன் கவர்ந்து வருகிறார். பள்ளிக்கு போகாமல் லியோ பவ் சுன் தமிழ் படிக்கிறார், பேசுகிறார். அவர் பேசும் கொஞ்சும் தமிழை கேட்பதற்காகவே ஏராளமான சுற்றுலா பயணிகள் சைனீஸ் ரெஸ்டாரன்டிற்கு வருவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

டிச 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி