/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ மானியம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல் | Paddy Sowing | Cuddalore
மானியம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல் | Paddy Sowing | Cuddalore
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் ஒரு வாரத்துக்கு மேலாக பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்து நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. வயல்களில் நெல் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைத்து வருவதால் விவசாயிகள் வயல்களில் விதை நெல் விதைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து ஆடி மாதம் நாற்றுகள் பறித்து நடவு செய்யும் பணியையும் துவங்க உள்ளனர். விவசாயிகள் பகல் நேரம் முழுவதும் கண்காணித்து சில்வர் தட்டில் ஓசை எழுப்பி பறவைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கூடலூரில் அதிக அளவில் நெல் விவசாயம் செய்து வந்தாலும் அரசு உதவி கிடைக்காததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஜூலை 04, 2024