தினமலர் பட்டம் மெகா வினாடி வினா விருது 2024 | அமெரிக்கா பறக்கும் அதிர்ஷ்டசாலிகள்
தமிழகம் மற்றும் புதுச்சேரி பள்ளி மாணவர்கள், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவிற்கு, நேரில் செல்லும் வாய்ப்பை வழங்கும் வகையில், தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பு பட்டம் இதழ் சார்பில், மெகா வினாடி-வினா போட்டி கடந்த, 2018 முதல் நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான முதற்சுற்று போட்டி, இந்துஸ்தான் கல்வி குழுமத்துடன் இணைந்து, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த, 140 பள்ளிகளில் நடத்தப்பட்டது. இதில் பள்ளி வாரியாக, முதலிடம் பிடித்த, இரு மாணவர்கள் கொண்ட அணி, இறுதிசுற்று போட்டியில் பங்கேற்றனர். அதன்படி,135 பள்ளிகளில் இருந்து வந்த மாணவர்களுக்கு தகுதி எழுத்து தேர்வு நடைபெற்றது. எழுத்து தேர்வில், 270 மாணவர்கள் பங்கேற்றனர் ; அதில், அதிக மதிப்பெண்கள் பெற்ற, 8 அணி இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இறுதி சுற்றானது கட்டத்தில் பட்டம், உண்மையும் பொய்யும், உன் வாய்ப்பு உன் கையில், விட்டா போச்சு, பட்டம் வேகம் விவேகம் என்ற ஐந்து சுற்றுக்களாக பிரிக்கப்பட்டு இருந்தது. இதில், மாணவர்கள், பட் -பட் என பதில் அளித்து போட்டியை கடுமையாக்கினார்கள். இறுதிச்சுற்று முடிவில் புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை, சத்யா ஏஜென்சிஸ் மற்றும் கோ-லோ நிறுவனம், கோ-ஸ்பான்சர்களாக இணைந்து நடத்தினர். கோவை லட்சுமி கிரைண்டர்ஸ், நியூ மென்ஸ் மற்றும் சம்பூரனா டிஸ்டிபியூட்டர்ஸ், ஆகியோர் கரம் கோர்த்து நடத்தினர். இது பற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.