/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பிளாஸ்டிக்கில் கூடு கட்டிய தேன்சிட்டு! இயற்கை அழிவுக்கான எச்சரிக்கையா?
பிளாஸ்டிக்கில் கூடு கட்டிய தேன்சிட்டு! இயற்கை அழிவுக்கான எச்சரிக்கையா?
தடாகம்-ஆனைகட்டி சாலையில், ஜம்புகண்டி பிரிவு அருகே உள்ள தயா சேவா சதன் ஆசிரமத்தில், மாதுளை மரத்தில் தேன்சிட்டு ஒன்று கூடு கட்டியிருந்தது. ஆனால் அந்தக் கூட்டை உற்றுப் பார்த்தபோது அதிர்ச்சி. இயற்கையான புல், நார், இலைகளுக்குப் பதிலாக, பிளாஸ்டிக் இழைகளைக் கொண்டே அந்தக் கூடு கட்டப்பட்டிருந்தது. இதன் பின்னால் மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது. வனப்பகுதிக்குள் நாம் வீசும் ஒவ்வொரு பிளாஸ்டிக் பொருளும், அங்கே வாழும் உயிரினங்களின் வாழ்க்கைக்குள் சென்று கொண்டிருக்கிறது. ஆபத்தான விஷயம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
செப் 24, 2026