உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பூ குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திகடன்| Ponnani Sri Muthumariamman temple chariot festival

பூ குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திகடன்| Ponnani Sri Muthumariamman temple chariot festival

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பொன்னானி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் 34 ம் ஆண்டு தேர்த் திருவிழா கடந்த 2 ம் தேதி கோயில் கமிட்டி தலைவர் பிரபாகரன் தலைமையில் கொடியேற்று விழாவுடன் துவங்கியது. தொடர்ந்து காப்பு கட்டுதல், அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இரவு சிறுவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது. ஆற்றங்கரைக்கு சென்று அம்மன் குடியழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 4 ம் தேதி ஆற்றங்கரையில் இருந்து பறவை காவடி, வேல்காவடி,  தீச்சட்டி, வேல்பூட்டி நடந்த ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து பூ குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை தேர் ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இன்று காலை அம்மனுக்கும், பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள், நீர்வெட்டுதல், மாவிளக்கு பூஜை, கரக ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை கோயில் கமிட்டி நிர்வாகிகள் பிரபாகரன், சிவமயம், துரை ரத்தினம், கலைச்செல்வன் தலைமையிலான குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தனர்.

மே 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ