உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் களைகட்டியது ஆயுத பூஜை விற்பனை

கோவையில் களைகட்டியது ஆயுத பூஜை விற்பனை

சரஸ்வதி மற்றும் ஆயுதபூஜையை முன்னிட்டு வீடுகள், அலுவலகங்கள், தொழிற்கூடங்கள், வர்த்தக நிறுவனங்களில் நடக்கும் வழிபாடுகளுக்கும் தேவையான பொருட்களின் விற்பனை அமோகமாக இருந்தது. பொதுமக்களும் தொழிலாளர்களும் பூஜைகளுக்கு தேவையான பொருட்களை ஆர்வத்துடன் வாங்கிசென்றதால் பூமார்க்கெட், டி.கே.மார்க்கெட், ராஜவீதி, ஒப்பணக்காரவீதி பகுதிகள் விழாக்கோலம் பூண்டிருந்தது. விற்பனையும் பரபரப்பாக இருந்தது. அரசு மற்றும் பல தனியார் அலுவலகங்களில் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது. அலுவலகங்களில் அலங்கார தோரணங்கள் கட்டப்பட்டு ஊழியர்களுக்கு சிறு சிறு போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பாக பணிபுரிந்த பணியாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. கோவையில் களைகட்டிய ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விற்பனை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை