உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை கண்காட்சியில் வரலாறு பேசும் அஞ்சல் தலைகள்

கோவை கண்காட்சியில் வரலாறு பேசும் அஞ்சல் தலைகள்

கோவை மாவட்ட அளவிலான, கோவை பெக்ஸ் 2024 அஞ்சல் தலை கண்காட்சி, பீளமேடு சுகுணா திருமண மண்டபத்தில் துவங்கியது. இதில், தேச தலைவர்கள், விளையாட்டு, இதிகாசங்கள், பறவைகள் மற்றும் விலங்குகள், பாரத ரத்னா விருது பெற்றவர்கள் என்பன உட்பட, 150 தலைப்புகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அஞ்சல் தலைகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. அஞ்சல் தலை கண்காட்சியை முன்னிட்டு, கோவையில் உள்ள பள்ளிகளில், மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கடிதம் எழுதும் போட்டியில், 3,000 பேர், ஓவியப் போட்டியில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர், கண்காட்சியில் நடத்தப்பட்ட போட்டியில் பங்கேற்றனர். இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

நவ 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ