அக்கறை இல்லாமல் கட்டப்பட்ட அரைகுறை பாலத்தின் அவலங்கள்
கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையத்தில் ரூ. 119 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. சுமார் 5 ஆண்டுகளாக கட்டப்பட்ட அந்த பாலம் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் என்று எதிர்பார்த்தால் பல பிரச்னைகளை கொண்டதாக உள்ளது. 5 ஆண்டுகள் கட்டப்பட்ட பின்னரும் அந்த பாலம் அரை குறையாக கட்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த மேம்பாலத்தில் பல அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் விடப்பட்டுள்ளன. முக்கியமாக தெரு விளக்குகள் எரிய வில்லை. இப்படி அக்கறை இல்லாமல் கட்டப்பட்ட அரை குறை பாலத்தின் அவலங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
நவ 08, 2024