உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஆடை வடிவமைப்பு; கற்பனையால் கைகூடும் கலை

ஆடை வடிவமைப்பு; கற்பனையால் கைகூடும் கலை

திருப்பூரில் கேட் பேட்டர்ன் எனப்படும் ஆடை வடிவமைப்பு தொழில் செய்து வரும் தியாகராஜன் 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி வழங்கி, 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பும் பெற்றுக் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், ஆடை துறையை பொறுத்தவரை, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில், தேவை இருந்துக் கொண்டே தான் இருக்கும்; மாறாக, ஆடைகளின் வடிவமைப்பில் வேண்டுமானால் மாற்றம் ஏற்படலாம். அவர்களின் தேவைக்கேற்ப தொழில்நுட்பங்களை அப்டேட் செய்து கொள்வது அவசியம். ஆரம்ப காலங்களில், மனித ஆற்றல் மூலம் மேற்கொள்ளப்படும் பேட்டர்ன் மட்டும் தான் இருந்தது. நாளடைவில், கேட் தொழில்நுட்பம் அவசியமானதாக மாறியது; தற்போது, கேட் இல்லாமல் பேட்டர்ன் இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. ஆடை உற்பத்தி துறையில், இப்பிரிவு முதன்மையானது; முக்கியமானது. ஆடை வடிமைப்பு என்பது, இத்தொழில்நுட்பம் வாயிலாக எளிதாகிறது; நான்கு பேர் செய்யும் வேலையை ஒருவர் செய்கிறார் என்றார். இதுகுறித்த வீடியோ தொகுப்பை காணலாம்.

ஜன 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி