உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பையில் வீசும் பிளாஸ்டிக்கில் இருந்தும் ஆயில் தயாரிக்கலாம்

குப்பையில் வீசும் பிளாஸ்டிக்கில் இருந்தும் ஆயில் தயாரிக்கலாம்

திருப்பூரில் நொய்யல் மற்றும் கவுசிகா ஆறுகள் உள்ளன. அவற்றை சுத்தப்படுத்தும் பணியிலும், குப்பைகளை மேலாண்மை செய்யும் பணியிலும் திருப்பூர் பாதுகாப்பு இயக்கம் களம் இறங்கி உள்ளது. அவர்கள் குப்பையை மறுசுழற்சி செய்து வேறு பொருட்கள் தயாரிப்பதற்காக பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வருகிறார்கள். அடுத்த தலைமுறையாவது குப்பைகளை பொறுப்போடு கையாள வேண்டும் என்பதற்காக பள்ளி, கல்லுாரிகளிலும் அந்த அமைப்பினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இது தவிர உள்ளாட்சி அமைப்புகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குப்பையை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து கொடுத்தால் தான் அவற்றை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்று மறுசுழற்சி செய்து உபயோகமுள்ள பொருளாக மாற்ற முடியும். சானிடரி குப்பையையும் மக்கும் குப்பையில் போட்டு விடுகிறார்கள். இது தவறு. குப்பையில் வீசும் பிளாஸ்டிக்கில் இருந்தும் ஆயில் தயாரிக்கலாம். இப்படி குப்பையை மறு சுழற்சி செய்து உபயோகப்படுத்தும் பொருளாக தயாரிப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

பிப் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி