உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ராமாயண வரலாற்றை பறைசாற்றும் நகைகள்!

ராமாயண வரலாற்றை பறைசாற்றும் நகைகள்!

கோவை ரேஸ்கோர்ஸ் சாலையிலுள்ள, தாஜ் விவாந்தா ஹோட்டலில் ஆசிய நகை கண்காட்சி துவங்கியது. இதில், உத்திரபிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு மரியாதை செய்யும் வகையில், கியா நகை நிறுவனம் சார்பில் ராமாயண வரலாற்றை பறைசாற்றும் விதமாக பெண்டன்ட் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. இந்த பிரத்யேக பெண்டன்ட் பார்வையாளர்களை கவரும் வகையில் உள்ளது. ராமாயணத்தில் ராமரின் வரலாற்றை பறைசாற்றும், வகையில் தசரதன் பிள்ளைகளுடன் அமர்ந்துள்ள காட்சி, ராமர்- லட்சுமணன் வித்வித்தை பயிற்சி, ராமர் -சீதா சுயம்வரம், ராமர் வனவாசம் என பல முக்கிய நிகழ்வுகள் மிகவும் நுட்பமாக பிரத்யேக வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரு பென்டன்ட், 40 கிராம் முதல் 130 கிராம் வரை எடையுள்ளதாக உள்ளன. இந்நிறுவனம் சார்பில், 22 பிரத்யேக பென்டன்ட் வரும், 22ம் தேதி அயோத்தி கும்பாபிேஷகத்தை முன்னிட்டு பெங்களூரில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. அதன் முன்னோட்டமாக இக்கண்காட்சியில் பென்டன்ட் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஜன 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை