உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் குடியரசு தின விழா | Republic day celebration

முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் குடியரசு தின விழா | Republic day celebration

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில் குடியரசு தின விழா சிறப்பாக நடந்தது. விழாவில் வளர்ப்பு யானைகள் வரிசையாக அணி வகுத்து நிற்க, அதன் மீது பாகன்கள் தேசிய கொடியை ஏந்தி அமர்ந்திருந்தனர். யானைகள் முகாம் வனச்சரகர் மேகலா தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதைத் தொடந்து வளர்ப்பு யானைகளும் தும்பிக்கையை உயர்த்தி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தின. இந்நிகழ்வு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. விழாவில் வனச்சரகர்கள் மனோஜ்குமார், விஜயன், வன ஊழியர்கள், யானை பாகன்கங்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஜன 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை