நல்ல தண்ணிக்கு அரை கி.மீ., அலையறோம் | வேதனையில் மக்கள்
கோவை மாவட்டம் அன்னுார் ஒன்றியம் ருத்திரியாம்பாளையம் கிராமத்துக்கு மாதத்துக்கு ஒரு முறை அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. அந்த தண்ணீரையும் கிராம மக்கள் பல கிலோ மீட்டர் துாரம் நடந்து சென்று தான் எடுத்து வருகிறார்கள். பெரும்பாலும் கூலி வேலை செய்யும் அந்த கிராம மக்கள் பள்ளிக்கு செல்லும் தங்கள் பிள்ளைகளை லீவு போட வைத்து குடிநீர் எடுக்க சொல்கிறார்கள். இதனால் அவர்களின் படிப்பு வீணாகிறது. குடிநீர் கிடைக்காமல் அவதிப்படும் ருத்திரியாம்பாளையம் கிராம மக்களின் உள்ளக் குமுறல் குறித்து இந்த வீடியோ பதிவில் காணலாம்.
ஜன 03, 2025