60 அணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு| Sahodaya football tournament| covai
60 அணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு| Sahodaya football tournament| covai கோவை சந்திர காந்தி பப்ளிக் பள்ளியில் 46வது கோயம்புத்தூர் சகோதயா கால்பந்து போட்டிகள் நேற்று துவங்கியது. நான்கு நாட்கள் நடைபெறும் போட்டி, அண்டர் 12 மற்றும் அண்டர் 14 பிரிவுகளில் நடத்தப்படுகிறது. அண்டர் 12 பிரிவில் 29 அணிகளும் அண்டர் 14 பிரிவில் 31 அணிகளும் களத்தில் இறங்கினர். பல்வேறு சுற்றுகளை அடுத்து அண்டர் 12 பிரிவில் இன்று இறுதி போட்டி நடந்தது. விவேகம் சீனியர் செகண்டரி பள்ளி அணியினர் இரண்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் மேட்டுப்பாளையம் SSVM பள்ளி அணியினரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றனர். மேலும் தி கேம்ப்போர்ட் சர்வதேச பள்ளி அணியினர் 4-3 என்ற கோல் கணக்கில் கோவை சி.எஸ் அகாடமி அணியை வீழ்த்தி மூன்றாம் இடம் பிடித்தனர். அண்டர் 14 பிரிவுகளில் போட்டி தொடர்ந்து நடைபெறுகிறது.