இந்திய விமானப்படை அனுமதி | Satelite Launched by Students | Annoor
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த அன்னூரில் டார்வின் அறிவியல் கிளப் சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களில் விண்வெளி துறையில் ஆர்வம் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மூன்று நாட்கள் விண்வெளி ராக்கெட் தயாரிப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. அன்னூர் நவபாரத் பள்ளியில் நடைபெற்ற இந்த மூன்று நாள் பயிற்சி முகாமில் சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 40 மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில் 30 மாணவர்கள் அரசு பள்ளியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்று நாள் பயிற்சியில் மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள் ராக்கெட்டுகளை இன்று விண்ணுக்கு அனுப்பும் நிகழ்வு நடைபெற்றது விமானப்படை அனுமதியுடன் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி இங்கர் சால் மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் மனசு ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ் ஆகியோர் செயற்கைக் கோள்களை விண்ணி்ல ஏவினர். சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவிற்கு பூமியிலிருந்து ஆகாயத்தை நோக்கி பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கைக்கோளில் பூமியின் வெப்பநிலை மற்றும் பருவநிலை காலங்கள் போன்றவற்றை கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த பல்வேறு கருத்துக்களை விஞ்ஞானி இங்கர் சால் வழங்கினார்