முன்னாள் மாணவர்கள் சந்திப்பு | School Function
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா, பொங்கல் விழா மற்றும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா என முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்றது. தலைமை ஆசிரியர் அப்துல்காதர் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர்கள் சங்கச் செயலாளர் முஹம்மது அலி வரவேற்றார். முன்னாள் மாணவர்கள் தங்களின் ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர். மாணவர்களின் கலை நிழச்சி நடைபெற்றன. சிறப்பு விருந்தினர்களாக சண்முகசுந்தரம் எம்பி, நகர் மன்ற தலைவர் மத்தின், பெற்றோர் ஆசிரியர் கழகம் முத்துக்குமாரசாமி, சமூக ஆர்வலர் பச்சை துண்டு பரமசிவம், டிஎஸ்பி சுகுமாறன், விவேகானந்தா கல்வி நிறுவனம் தலைவர் மூர்த்தி, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.
பிப் 01, 2024