உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / செடி வளர செடியே துணை! வித்தியாசமான விதைத்தட்டு

செடி வளர செடியே துணை! வித்தியாசமான விதைத்தட்டு

விதைப்பந்துகள் வாயிலாக விதைகள் பல இடங்களில் துாவப்படுகின்றன. விதைப்பந்துகளில் உள்ள விதைகள் சில நாட்கள் கழித்து முளைக்கும் என்று நாம் நினைக்கலாம். ஆனால், அவற்றில் உள்ள எல்லா விதைகளும் முளைக்கும் என்று உறுதியுடன் சொல்ல முடியாது. சில விதைகள் முளைக்கலாம். சில விதைகள் முளைக்காமல் போகலாம். இந்த குறையை போக்க மர விதை தட்டு என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விதைகள் மற்றும் அதோடு சேர்ந்த துணை செடிகளும் விதைக்கப்படுகின்றன. மர விதை முளைத்து வருவதற்கான அனைத்து சூழல்களும் விதை தட்டுகளில் செய்யப்பட்டுள்ளன. துணை செடிகள் எதற்கு வைக்கப்பட்டுள்ளது என்றால், மர விதை வளர்ந்து வரும் வரை அவற்றுக்கு நிழல் தருவதற்காக இந்த துணை செடிகள் வைக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பையினால் ஏற்படும் சுற்று சூழல் பாதிப்பை தடுப்பதற்காக விதைத் தட்டு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மர விதைகள் வளருவதற்கு விதைத் தட்டு தொழில்நுட்பம் எவ்வாறு உபயோகமாக உள்ளது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஆக 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை