/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ தமிழகத்தின் கோ கோ தந்தை என அழைக்கப்படும் அப்பாவு பாண்டியன் பங்கேற்பு | sports | covai
தமிழகத்தின் கோ கோ தந்தை என அழைக்கப்படும் அப்பாவு பாண்டியன் பங்கேற்பு | sports | covai
கோவை மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணி கோ கோ அசோசியேஷன் சார்பில் கார்த்தி கோ கோ கிளப் மாவட்ட அளவிளான முதல் சப் ஜூனியர், ஜூனியர், சிறுவர் மற்றும் சிறுமியர் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தியது. ஆர்.எஸ். புரம் தியாகி என்.ஜி. ராமசாமி மெமோரியல் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இப்போட்டியில் 40க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. சிறப்பு விருந்தினராக தமிழகத்தின் கோ கோ தந்தை என அழைக்கப்படும் அப்பாவு பாண்டியன் கலந்து கொண்டார். அவர் போட்டியில் பங்கேற்ற அணியினரை வாழ்த்தி உற்சாகப்படுத்தினார். வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் கோ கோ அசோசியேஷன் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஜூலை 14, 2024