கோவை நேரு ஸ்டேடியத்தில் விறுவிறுப்பான ஆட்டம் | sports | covai
கோவை நேரு ஸ்டேடியத்தில் எஸ்.என்.எஸ். 9வது ஜூனியர் தடகள போட்டிகள் கோலாகலமாக துவங்கியது. இப்போட்டிகள் நாளை நிறைவடைகிறது. இதில் 100 மீட்டர், 200 மீட்டர், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட தடகளப் போட்டிகளில் இளம் வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இப்போட்டியில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் என 56 பள்ளிகளை சேர்ந்த 2,000க்கும் மேற்பட் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 6 முதல் 10 வயது வரையிலான மாணவ, மாணவியருக்கு நடத்தப்பட்ட போட்டிகளை எஸ்.என்.எஸ். தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் செந்துார பாண்டியன் துவக்கி வைத்தார். உயரம் தாண்டுதல் போட்டியில் 17 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில் ரிஷி வர்சா, மதுஸ்ரீ, எல்ஜினா ஆகியோர் முதல் மூன்று இடங்களை வென்றனர். தொடர்ந்து 14 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் அபினேஷ் குமார், அகுல்ஹமாது, தியானேஸ்வர் ஆகியோர் முதல் மூன்று இடங்களை வென்றனர். 17 வயதுக்கு உட்பட்ட மாணவியர் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் இனியாஸ்ரீ, மிர்னாலயா, லட்சுமனஸ்ரீ ஆகியோர் முதல் மூன்று இடங்களை வென்றனர். 11 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியருக்கான போட்டிகள் நாளை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.