அசத்தலான ஆட்டம் | sports | Kovai
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இன்டர் பாலிடெக்னிக் அத்லெட்டிக் அசோசியேசன் சார்பில் மண்டல அளவிலான எறிபந்து மற்றும் வளைப்பந்து போட்டிகள் கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது. போட்டியை பாலிடெக்னிக் முதல்வர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார். எறிபந்து பிரிவில் எட்டு அணிகளும், வளைப்பந்து பிரிவில் ஒன்பது அணிகளும் கலந்து கொண்டன. எறிபந்து போட்டியில் முதல் ஆட்டத்தில் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அணியும், ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி அணியும் மோதின. இதில் அரசு மகளிர் பாலிடெக்னிக் 15-05 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் பாரதிராஜ் செய்திருந்தார். நாளை மாலை பரிசளிப்பு விழா நடக்கிறது.
செப் 18, 2024