உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இந்துஸ்தான் இன்ஜினீயரிங் கல்லுாரி சாம்பியன் | Sports | Kovai

இந்துஸ்தான் இன்ஜினீயரிங் கல்லுாரி சாம்பியன் | Sports | Kovai

கோவை அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான 10வது மண்டல டென்னிஸ் போட்டி இந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லுாரியில் நடந்தது. இதில் பல்வேறு சுற்றுக்களை அடுத்து நடந்த முதல் அரையிறுதியில் இந்துஸ்தான் இன்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணி 2-1 என்ற செட் கணக்கில் கற்பகம் கல்லுாரி அணியை வென்றது. இரண்டாம் அரையிறுதியில் ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணி 2-0 என்ற செட் கணக்கில் கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி அணியை வென்றது. இறுதிப்போட்டியில் இந்துஸ்தான் இன்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணி 2-0 என்ற செட் கணக்கில் ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணியை வென்று முதலிடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு இந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் நடராஜன் பரிசுகள் வழங்கினார்.

அக் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ