உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பெண்கள் பிரிவில் செங்கல்பட்டு அணி; ஆண்கள் பிரிவில் தமிழன் தளவாய் பட்டினம் அணி முதலிடம்

பெண்கள் பிரிவில் செங்கல்பட்டு அணி; ஆண்கள் பிரிவில் தமிழன் தளவாய் பட்டினம் அணி முதலிடம்

பெண்கள் பிரிவில் செங்கல்பட்டு அணி; ஆண்கள் பிரிவில் தமிழன் தளவாய் பட்டினம் அணி முதலிடம் | sports | Kovai உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் உள்ள லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு கபடி போட்டியை மடத்துக்குளம் எம்எல்ஏ மகேந்திரன் துவக்கி வைத்தார். அறக்கட்டளை நிறுவனர் செல்வராஜ் வரவேற்றார். தமிழகம் முழுவதில் இருந்து 43 அணிகள் பங்கேற்றன. முதல்நாள் போட்டியில் வெற்றி பெற்ற செங்கல்பட்டு பெண்கள் அணிக்கு முதல் பரிசு 15 ஆயிரம் மற்றும் கோப்பை, இரண்டாம் பரிசு பெற்ற அணிக்கு 10 ஆயிரம் மற்றும் கோப்பை, 3ம் பரிசு பெற்ற அணிக்கு 7 ஆயிரம் மற்றும் கோப்பை, 4ம் பரிசு பெற்ற அணிக்கு 5 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. இரண்டாம் நாள் நிகழ்வில் ஆண்களுக்கான கபடி போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது. வெற்றி பெற்ற தமிழன் தளவாய் பட்டினம் அணிக்கு வெற்றிக் கோப்பை மற்றும் 20 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசாக பழநி போலீஸ் அணிக்கு கோப்பை மற்றும் 10 ஆயிரம், 3ம் பரிசாக 7ஆயிரம் மற்றும் கோப்பை, 4 ம் பரிசாக 5 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

அக் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை