கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு | sports | Kovai
கோவை மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவியருக்கு நடத்தப்பட்ட கூடைப்பந்து போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கோவை மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் கோவை நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் கூடைப்பந்து போட்டி நடத்தப்பட்டது. இதில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில் எஸ்.வி.ஜி.வி. மெட்ரிக் பள்ளி முதலிடம், அல்வேர்னியா மெட்ரிக் பள்ளி இரண்டாமிடம் பெற்றன. 19 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மேல்நிலைப் பள்ளி முதலிடம், கோவை துணிவணிகர் சங்க மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடம் பெற்றன. 17 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் பெர்க்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடம், ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி அணி இரண்டாமிடம் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் பரிசு வழங்கினார்.