உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் |Sports | Kovai

வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் |Sports | Kovai

கோவை விவேகம் சீனியர் செகண்டரி பள்ளி சார்பில் பள்ளிகளுக்கு இடையேயான இரண்டாம் ஆண்டு நாதன் நினைவு கோப்பைக்கான ஐவர் கால்பந்து போட்டி விவேகம் பள்ளியில் நடந்தது. மாணவ மாணவிகளுக்கு 11, 13, 17 மற்றும் 19 ஆகிய வயது பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகள் நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டன. 11 வயது பிரிவு மாணவர் இறுதி போட்டியில் ஜி.ஆர்.டி. பள்ளி அணி 4 - 3 என்ற கோல் கணக்கில் விவேகம் பள்ளி அணியை வீழ்த்தியது. 13 வயது பிரிவில் ஜி.ஆர்.டி., பள்ளி அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் இந்தியன் பப்ளிக் பள்ளியை வீழ்த்தியது. 17 வயது பிரிவில் ராகவேந்திரா பள்ளி அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் சி.எஸ்., அகாடமி அணியை வீழ்த்தியது.

ஜூலை 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை