உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அண்ணா பல்கலை மண்டல வளாக மைதானம் களைகட்டியது | college sports

அண்ணா பல்கலை மண்டல வளாக மைதானம் களைகட்டியது | college sports

கோவை அண்ணா பல்கலை கோவை மண்டல வளாகம் உடற்கல்வித்துறை சார்பில் இன்ஜினீயரிங் மாணவர்களுக்கு இன்ஜினீயர்ஸ் பிரீமியர் லீக் - 24 என்ற D - 20 கிரிக்கெட் போட்டி அண்ணா பல்கலை மண்டல வளாக மைதானத்தில் நடந்தது. இதில் 18 அணிகள் பங்கேற்று நாக் அவுட் முறையில் போட்டியிட்டன. இறுதிப் போட்டியில் எஸ்.என்.எஸ். தொழில்நுட்பக் கல்லுாரி அணி மற்றும் குமரகுரு தொழில்நுட்பக் கல்லுாரி அணிகள் மோதின. டாஸ் வென்ற எஸ்.என்.எஸ். அணி முதலில் பேட்டிங் செய்து 17.1 ஓவர்களில் 80 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குமரகுரு அணியின் வசந்த் குமார் சிறப்பாக பந்து வீசி நான்கு விக்கெட் வீழ்த்தினார். அடுத்து விளையாடிய குமரகுரு அணியின் துவக்க வீரர் சக்தீஸ்வர் 49 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாட, அந்த அணி 9.1 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து வெற்றி இலக்கை கடந்தது. மூன்றாம் இடத்துக்கான போட்டியில் கே.பி.ஆர். இன்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அண்ணா பல்கலை கோவை மண்டல அணியை வீழ்த்தியது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாரதியார் பல்கலையின் உடற்கல்வித்துறை பேராசிரியர் அண்ணாதுரை, அண்ணா பல்கலை மண்டல வளாக என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் யுவராஜூ, உடற்கல்வி பயிற்றுனர் சரவணமூர்த்தி, உடற்கல்வி இயக்குனர் சிவ சங்கர் பரிசுகளை வழங்கினர்.

மார் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை