முதல்வர் ஸ்டாலின் ஒரு கோடி நிவாரணம் அறிவிப்பு| SSI murdered during investigation | udumalaipet |
முதல்வர் ஸ்டாலின் ஒரு கோடி நிவாரணம் அறிவிப்பு/ SSI murdered during investigation / udumalaipet உடுமலை குடிமங்கலம் பகுதியில மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் இருக்கு. கடந்த 3 வருஷமா திண்டுக்கல்ல சேர்ந்த மூர்த்தி மற்றும் அவரது மகன்கள் மணிகண்டன் மற்றும் தங்கபாண்டி, குடும்பத்தோட தோட்டத்துல வேலை செஞ்சுட்டு வராங்க. நேத்து ராத்திரி ஃபுல் போதையில இருந்த மூர்த்திக்கும் அவரது மகன்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுருக்கு. வாக்குவாதம் கைகலப்பா மாறி, மணிகண்டன் தாக்குனதுல மூர்த்திக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கு. இத பாத்த அக்கம் பக்கத்தினர் அவசர உதவி எண் 100க்கு தகவல் தெரிவிச்சிருக்காங்க. ராத்திரி ரோந்து பணியில இருந்த குடிமங்கலம் ஸ்டேஷன் சிறப்பு எஸ் ஐ சண்முகவேல் இன்வேஸ்டிகேஷன் நடத்த ஸ்பாட்டுக்கு போயிருக்காரு. போலீஸ பார்த்து பயந்த மணிகண்டன், தோட்டத்து வீட்ல பதுங்கிட்டாரு. அப்பா மகன் சண்டைய பிரிச்சுவிட்ட சண்முகவேல், சமரசம் பேசிருக்காரு. மூர்த்திய ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ண ஆம்புலன்ஸுக்கு ஏற்பாடு செஞ்சிருக்காரு. மேலும், மூர்த்தி மற்றும் தங்கபாண்டிய போட்டோ எடுத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அப்டேட் கொடுத்திருக்கிறாரு. மூர்த்தி மற்றும் தங்க பாண்டி கிட்ட சண்முகவேல் சாதாரணமா பேசிட்டு இருந்திருக்காரு அப்போ திடீர்னு அந்த கொடூர சம்பவம் நடந்திருக்கு. வீட்டுல பதுங்கி இருந்த மணிகண்டன், சண்முகவேல வெட்ட ஆக்ரோஷமா பாய்ஞ்சுருக்காரு. ஷாக் ஆனா சண்முகவேல், உயிர் பிழைக்க ஓட்டம் புடிச்சாரு. குடி போதை வெறியிலிருந்த மூர்த்தி மற்றும் தங்கபாண்டியும், மணிகண்டன் கூட சேர்ந்துக்கிட்டாங்க. மூணு பேரும் சேர்ந்து சண்முகவேலை சரமாரியா வெட்டி சாச்சுட்டாங்க. ஆத்திரம் அடங்காம, சண்முகவேல் கூட வந்த டிரைவர துரத்தி இருக்காங்க. ஓடி உயிர் பொழச்ச டிரைவர், போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்திருக்காரு. ஸ்பாட்டுக்கு போலீஸ் வரதுக்குள்ள, அப்பாவும் ரெண்டு மகன்களும் எஸ்கேப் ஆகிட்டாங்க. ஸ்பாட்டுக்கு வந்து குடிமங்கலம் போலீசார் பரிசோதிக்கிறப்போ, சண்முகவேல் ரத்த வெள்ளத்துல்ல இறந்து கிடந்தாரு. MLA தோட்டத்துக்கு இன்வெஸ்டிகேஷன் நடத்தச் சென்ற 57 வயசு SSIய போதையில இருந்த அப்பாவும் மகனும் கொடூரமா கொலை பண்ண சம்பவம் கடும் அதிர்ச்சிய ஏற்படுத்திருக்கு. சம்பவம் தொடர்பா மூர்த்தியோட மனைவி மற்றும் மருமகள் கிட்ட தீவிர விசாரணை நடத்தப்படுது. முக்கிய குற்றவாளியாக கருதப்படுற மணிகண்டன் மேல திண்டுக்கல் போலீஸ் ஸ்டேஷன்ல ஏற்கனவே நாலு வழக்கு இருக்கிறது குறிப்பிடத்தக்கது. தப்பி ஓடிய மூனு பேரையும் பிடிக்க, 6 தனிப்படை அமைச்சிருக்காங்க. கொலை நடந்த ஸ்பாட்டில் கோவை மேற்கு மண்டல டிஐஜி சசிமோகன் மற்றும் திருப்பூர் எஸ் பி யாதவ்கிரிஷ் ஆய்வு நடத்தி இருக்காங்க. சண்முகவேல் உடலை மீட்டு திருப்பூர் அரசு ஹாஸ்பிடல் அனுப்பிருக்காங்க. தன்னோட தோட்டத்துல இப்படி ஒரு கொடூர சம்பவம் நடந்ததுக்கு, மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரன் வருத்தம் தெரிவிச்சிருக்காரு. திருப்பூர் அரசு ஹாஸ்பிடலுக்கு நேரில் சென்று, சண்முகவேல் மகன் லலித்குமாருக்கு ஆறுதல் சொல்லி இருக்காரு. அதைத்தொடர்ந்து, டியூட்டில இருக்கும்போது கொடூரமா கொலை செய்யப்பட்ட சண்முகவேலோட பையன் லலித்குமாருக்கு உடனடியா அரசு வேலை வழங்கணும்னு திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே கிட்ட மகேந்திரன் மனு கொடுத்திருக்காரு. சண்முகவேல் கொலை சம்பவத்துக்கு முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவிச்சி, சண்முகவேல் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் அறிவிச்சிருக்காரு. தமிழக அரசு சார்புல செய்தி துறை அமைச்சர் சுவாமிநாதன், சண்முகவேல் மகன் லலித்குமாரை நேர்ல சந்திச்சு ஆறுதல் சொல்லி இருக்காரு. இந்த சம்பவம் குறித்து பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்துல கடுமையா கண்டனம் தெரிவிச்சி இருக்காரு. போதையில தள்ளாடி தத்தளிக்கும் தமிழகத்துல, கொலை, கொள்ளை சம்பவம் நடக்கிறது அன்றாட நிகழ்வாயிருக்கு. தமிழகத்துல, பல இடத்துல சர்வ சாதாரணமா 24 மணி நேரமும் சரக்கு விற்பனை நடக்குது. TASMACக்கு விதிச்ச நேர கட்டுப்பாடு எல்லாம் வெறும் பாலிசியாவே இருக்குது. டூட்டில இருக்கிற போலீசுக்கே பாதுகாப்பு இல்லனா, பாமர மக்களோட நிலம படுமோசம் தான். தமிழக அரசு, முறையான நடவடிக்கை எடுத்து, போதைப் பொருள் புழக்கத்தை தடுக்குற வரைக்கும், தமிழ்நாட்டுல வாழ்ற மக்கள் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பது வேதனை மிகுந்த நிதர்சனம்.