தமிழக மற்றும் கேரள எல்லை ஓட்டுச்சாவடிகளில் தமிழ், மலையாள மொழிகளில் வாக்காளர்கள் விவரம்
தமிழக மற்றும் கேரள எல்லை ஓட்டுச்சாவடிகளில் தமிழ், மலையாள மொழிகளில் வாக்காளர்கள் விவரம் | Candidate profile in Tamil and Malayalam Languages நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதிகள் கேரள மாநிலம் வயநாடு மற்றும் மலப்புரம் பகுதிகளை ஒட்டி அமைந்துள்ளது. இப்பகுதிகளில் தமிழர்கள் மற்றும் மலையாளிகள் அதிகம் வசிக்கின்றனர். இங்குள்ள பள்ளிகளில் தமிழ் மற்றும் மலையாள மொழிகள் பயிற்று மொழியாக உள்ளது. இதையடுத்து வாக்காளர்களுக்கு வசதியாக ஓட்டுச்சாவடி மையங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்கள் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் அச்சிட்டு ஓட்டுச்சாவடி முகப்பு பகுதிகளில் ஒட்டப்பட்டது. அதேபோல் சேரம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களில் வனக்குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.