1330 குறள் சொல்லும் திருக்குறள் வனம்!
கோவை மாவட்டம் கணியூர் ஊராட்சியில் மக்கும் குப்பையை உரமாக பயன்படுத்தி குறள் வனம் என்ற பெயரில் 2023ம் ஆண்டு வனம் அமைக்கப்பட்டது. மக்கும் குப்பை உரமாக இட்டதாலும், அடர் வனமாக அமைத்ததாலும் இங்குள்ள மரங்கள் வேகமாக வளர்ந்துள்ளன. இந்த குறள் வனத்துக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இங்கு நடவு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு மரத்திலும் ஒரு குறள் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்த குறள் வனத்தை பள்ளி மாணவர்களும் பார்வையிட்டுள்ளனர். இது தவிர நட்சத்திர வனமும் அமைக்கப்பட்டுள்ளது. குறள் வனம் பற்றிய சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 17, 2025