உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பழங்குடியினரையும் விட்டு வைக்காத அந்த நோய்! ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்

பழங்குடியினரையும் விட்டு வைக்காத அந்த நோய்! ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்

தங்களது பாரம்பரியத்தை இன்னும் மாற்றாமல் இருப்பவர்கள் பழங்குடியின மக்கள் மட்டுமே. கட்டுப்பாடுகள் மாறாவிட்டாலும், உணவு பழக்கவழக்கங்களில் என்னவோ இவர்களிடம் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, இருளர் இனத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக குரும்பர், மலசர், காடர், பளியர், முடுகர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இயற்கை உணவுகளான தானியங்கள், மூலிகைகள், கிழங்குகள், காய்கறிகளை அதிகம் உட்கொண்டு வந்த இவர்கள் இன்று நாகரீக வளர்ச்சியால், அவர்களுக்கு வாழ்வியல் சூழலுக்கு முற்றிலும் தொடர்பில்லாத உணவு வகைகளான அரிசி, கோதுமை, உள்ளிட்ட உணவு வகைகளை உட்கொள்ள துவங்கியுள்ளனர். மேலும், இயற்கை வாழ்வியல் முறையை விடுத்து உடல் உழைப்பு பணிகளான, வேட்டை, விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்டவற்றில் இருந்து முற்றிலும் விலகி உள்ளனர். இதன் விளைவு பல தலைமுறைகளாக கேட்டிராத பல்வேறு நோய்கள் இவர்களை ஆட்கொள்ளத் துவங்கியுள்ளன. பழங்குடியினரையும் விட்டு வைக்காத அந்த நோய்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி