உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் டிஎஸ்சி சேலஞ்சர் டிராபி கிரிக்கெட்! பரபரப்பாக நடந்த ஆட்டம் | TSC Challenger Trophy

கோவையில் டிஎஸ்சி சேலஞ்சர் டிராபி கிரிக்கெட்! பரபரப்பாக நடந்த ஆட்டம் | TSC Challenger Trophy

* கோவையில் டிஎஸ்சி சேலஞ்சர் டிராபி கிரிக்கெட்! பரபரப்பாக நடந்த ஆட்டம் | TSC Challenger Trophy | coimbatore திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் சார்பில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான டி.எஸ்.சி சேலஞ்சர் டிராபி 30 ஓவர் கிரிக்கெட் போட்டி 13ம் தேதி துவங்கியது. கோவை முருகம்பாளையம் வயர்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற கடப்பா ஓய்.எஸ்.ஆர் கிரிக்கெட் அசோசியேஷன் அணி 30 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 253 ரன் எடுத்தது. பேட்ஸ்மேன் பாரத் ரெட்டி சதம் விளாசினார். கிருத்திக் ரெட்டி 87 ரன் எடுத்தார். கடின இலக்கை விரட்டிய கிரிக்கெட் நெக்ஸ் அகாடமி அணி 30 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 196 ரன் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய கிருத்திக் ரெட்டி 6 ஓவரில் 25 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். 57 ரன் வித்தியாசத்தில் கடப்பா ஓய்.எஸ்.ஆர் கிரிக்கெட் அசோசியேஷன் அணி வென்றது. சதம் அடித்த பாரத் ரெட்டி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஜன 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ