உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / உக்கடம் பாலத்தில் தொடரும் நெரிசல்...

உக்கடம் பாலத்தில் தொடரும் நெரிசல்...

உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை, புதியதாக கட்டப்பட்ட மேம்பாலத்தின் இறங்குதளத்தில் தொடரும் வாகன நெரிசலால் வாகன ஓட்டிகள், பாலத்தை விட்டு இறங்க முடியாமல் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். உக்கடம் இறங்கு தளத்தில், அன்றாடம் காலை மற்றும் மாலை நேரங்களில் (பீக் ஹவர்சில்)கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. உக்கடம் பாலத்தின் இறங்கு தளத்தில் வலது பக்கம் சுங்கம் செல்வதற்கான சாலை பிரியும் பகுதி உள்ளது. அங்கு பணிகள் நிறைவடையாததால், அப்பகுதியை கான்கிரீட் தடுப்புகளால் தடுத்துள்ளனர். இந்த தடுப்பை, சற்று தள்ளி, சாலை இரண்டாக பிரியும் பகுதியில் அமைத்தால், போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறையும். இதை, நெடுஞ்சாலைத்துறையினர் கண்காணித்து சீர்படுத்த வேண்டும். உக்கடம் மேம்பாலத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஆக 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை