ஆம்புலன்ஸ் ரெஸ்பான்ஸ் நேரத்தை குறைத்த யு டேர்ன்
கோவையில் போக்குவரத்து நிறைந்த அவினாசி சாலையில் 70 சதவீத வாகனங்கள் நேராகத் தான் செல்கின்றன. 30 சதவீத வாகனங்கள் தான் இடது புறம் மற்றும் வலது புறம் திரும்புகின்றன. அந்த சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக யு டேர்ன் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதே போல ரவுண்டானாவும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளது. யு டேர்ன் முறையினால் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. மேலும் விபத்துக்களும் குறைந்துள்ளன. இது தவிர 108 ஆம்புலன்சுகளின் ரெஸ்பான்ஸ் நேரம் 11 நிமிடங்களிலிருந்து 7 நிமிடங்களாக குறைந்துள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைத்துள்ள யு டேர்ன் மற்றும் ரவுண்டானாவின் பயன்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 07, 2024