வாகனத்தில் இருந்த டைல்ஸ் கற்கள் நடுவே சிக்கியவர்களின் கதி என்ன | Coimbatore | vehicle accidents
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் குட்டையூரில் இருந்து டைல்ஸ் கற்கள் ஏற்றி கொண்டு அபிராமி தியேட்டர் பகுதியில் கற்களை இறக்க ஊழியர்களுடன் பிக்கப் வாகனம் மேட்டுப்பாளையம் காரமடை ரோட்டில் சென்றது. அந்த வாகனத்திற்கு முன்பாக சொகுசு காரும் அதற்கு முன்பாக வீட்டு உபயோக பொருட்கள் ஏற்றி வந்த பிக்கப் வாகனம் என ஒன்றன் பின் சென்று கொண்டு இருந்தன. மூன்று வாகனங்களுக்கு முன்னால் சென்ற லாரி திடீரென நின்றது. இதனால் பின்னால் வந்த மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் டைல்ஸ் கற்கள் ஏற்றி வந்த பிக்கப் வாகனத்தில் கற்களுக்குள் ஊழியர்கள் சிக்கி கொண்டு அலறினர். அருகில் இருந்த பொதுமக்கள் கற்களை கீழே இறக்கி காப்பாற்றினர். சிறு சிறு காயங்களுடன் தொழிலாளர்கள் தப்பினர். சிசிடிவி காட்சிகள் வெளியானது.