91முகாம்களில் 10,000 பேர் தஞ்சம் | Wayanad Landslide | The death toll is 357
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டக்கை, சூரல்மலை, பூஞ்சிரித்தோடு, அட்டமலை, மேப்பாடி உள்ளிட்ட மலை கிராமங்கள் சின்னாபின்னமாகின. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ராணுவம் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இன்னும் 200 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஐந்தாவது நாளாக இன்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடக்கிறது. நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்து சிகிச்சை பெற்ற 206 பேர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். வயநாடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 91 முகாம்களில் 10 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வயநாடு பேரழிவை மாநில பேரிடராக அறிவித்து கேரள அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.