உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பெண் ஆட்டோ டிரைவரை பிழைப்பு நடத்த விடாமல் தடுக்கும் கும்பல் | women auto driver threatened

பெண் ஆட்டோ டிரைவரை பிழைப்பு நடத்த விடாமல் தடுக்கும் கும்பல் | women auto driver threatened

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காளிவேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். கூலி தொழிலளியான இவரது மனைவி பிரியா வயது 38. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பிரியா சொந்தமாக ஆட்டோ ஓட்டுகிறார். கணவருக்கு உடல் நலம் சரியில்லாததால் சரவர வேலைக்கு செல்வதில்லை. இதனால் குடும்ப பாரத்தை பிரியா சுமக்க வேண்டியதாயிற்று. வீட்டு வாடகை, ஆட்டோ வாடகை, குழந்தைகளின் படிப்பு செலவு, கணவரின் மருத்துவ செலவு என அனைத்தும் பிரியா ஒருவரின் வருமானத்தை நம்பியே இருந்தது. பிழைப்பு நடத்துவதற்காக பல்லடத்தில் உள்ள ஏதாவது ஒரு ஸ்டாண்டில் தனக்கு ஆட்டோ ஓட்ட இடம் ஒதுக்கி தருமாறு மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தார். கடந்த ஆண்டு நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ.,வை சந்தித்தும் மனு அளித்தார். தற்போது உள்ள ஆட்டோ ஸ்டாண்டையே பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆர்.டி.ஓ., கூறினார். ஆனால் அங்குள்ள சில ஆட்டோ ஓட்டுனர்கள், பிரியாவை அனுமதிக்க மறுக்கின்றனர். இதனால், மாணிக்காபுரம் ரோட்டில் ஒரு ஓரமாக நிறுத்திக்கொண்டு ஆட்டோ ஓட்டி வருகிறார். இதற்கிடையே வயதான இருவர் பிரியா ஆட்டோவில் ஏற முயன்ற போது, சில ஆட்டோ ஓட்டுனர்கள் தடுத்து நிறுத்தி அவர்களை கீழே இறங்க வைத்தனர். பிரியாவை தகாத வார்த்தையால் திட்டி மனதளவில் காயப்படுத்தினர். பெண் என்பதால் தன்னை நிராகரிப்பதாக கண்ணீர் விட்டு கதறி அழுதார். ஆட்டோ ஓட்டி தான் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற சூழலில் ஓராண்டுக்கு மேல் ஆகியும் இப்பிரச்னைக்கு எனக்கு தீர்வு கிடைக்கவில்லை. இதனால், மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான பிரியா கலெக்டரை சந்தித்து முறையிட உள்ளார்.

பிப் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை