உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 270 வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்பு | Zonal Judo championship| Covai

270 வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்பு | Zonal Judo championship| Covai

270 வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்பு | Zonal Judo championship| Covai கோவை வருவாய் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் நேற்று துவங்கியது. மாணவிகளுக்கான ஜூடோ போட்டியில் 270 பேர் பங்கேற்றனர். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் துவக்கி வைத்தார். 19 வயதுக்கு உட்பட்ட 36 கிலோ எடைக்கும் கீழ் பிரிவில் ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பெண்கள் பள்ளி மாணவி ரெயிஷா பெனுன், மகாஜனா பள்ளி மாணவி தமனா ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். 40 கிலோவுக்கும் குறைவான எடை பிரிவில் ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பள்ளி மாணவி ஸ்வேதா, அவினாசிலிங்கம் பள்ளி மாணவி முத்தீஸ்வரி, ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் பள்ளி மாணவி சிவானி ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். 44 கிலோவுக்கும் குறைவான எடை பிரிவில் ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பள்ளி தர்சனா, குளோபல் பாத்வேஸ் பள்ளி சுபஸ்ரீ, ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பெண்கள் பள்ளி நேத்ரா ஆகியோர் முதல் மூன்று இடங்களை வென்றனர். 17 வயதுக்கு உட்பட்ட 36 கிலோவிற்கு குறைவான எடை பிரிவில் ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பள்ளி கவிஸ்ரீ, புனித மேரிஸ் பள்ளி சப்னா, ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பள்ளி மாணவி ரிதன்யா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். 40 கிலோ எடைக்கும் குறைவான எடை பிரிவில் பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் பள்ளி ஹாசிகா, ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பள்ளி வர்ஷினி, நேரு வித்யாலயா நவ்யா ஸ்ரீ, ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பள்ளி ஜிக்ரா நாஸ் ஆகியோர், முதல் நான்கு இடங்களை தட்டிசென்றனர். 44 கிலோவுக்கும் குறைவான எடை பிரிவில் ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பள்ளி ஹரிவர்சா, ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பள்ளி நேன்சி, விக்டரி வித்யாலயா நிகீஷா ஆகியோர், முதல் மூன்று இடங்களை வென்றனர். தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.

அக் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ