/ மாவட்ட செய்திகள்
/ கடலூர்
/ கர்நாடகாவிற்கு நெய்வேலி என்எல்சி மின்சாரம் தர விவசாயிகள் எதிர்ப்பு| Farmer Protest
கர்நாடகாவிற்கு நெய்வேலி என்எல்சி மின்சாரம் தர விவசாயிகள் எதிர்ப்பு| Farmer Protest
நெய்வேலி என்எல்சி மூலம் உற்பத்தி ஆகும் மின்சாரம் கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு வருகிறது. தமிழக டெல்டா பாசன வசதிக்காக காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடகாவிற்கு என்எல்சி மின்சாரம் விநியோகம் செய்வதை தமிழக அரசு உடனே நிறுத்தக்கோரி என்எல்சியை முற்றுகையிட்டு விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். தடை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட 400க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.
மார் 31, 2025